நான்

Paddalam.blogspot.com உங்களை வரவேற்கின்றது...
JavaScript Free Codee 2

வியாழன், 13 மே, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்

லெதர் டிரஸ் கௌபாய் ஹீரோக்களை மறுபடியும் உலவ விட்டு, நெஞ்சுக்குள் ஒரு ஃபெதர் டச் கொடுத்திருக்கிறார் சிம்புதேவன். தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டு தனிக்குதிரை சவாரி செய்யும் இவருக்கு கௌபாய் ஸ்டைலில் ஒரு 'டுமீல்....!'

இரும்புக்கோட்டையை சேர்ந்த கிழக்கு கட்டை, தனக்கு கீழே சில ஊர்களை அடிமையாக வைத்திருக்கிறான். அவனின் அடக்குமுறையை எதிர்த்து போராடுகிறான் முரட்டுசிங்கம். யாருக்கு வெற்றி என்பதுதான் ஒருவரி கதை. இதற்காக சிம்புதேவன் உருவாக்கிய உலகம் இருக்கிறதே, வாரே வாவ்...! ஷோலேபுரம், ஜெய்சங்கர்புரம், அங்கேயிருக்கிற அசோகன் போன்ற அந்தகால வில்லன் சிலைகள், 'இங்கு குரல்வளை நெரிக்கப்படும்' என்ற வாசகத்தோடு இயங்கும் து£க்குமேடை, பாஸ்மாக் கடை போர்டில், குடி குடியை ரேப் பண்ணும் என்று எழுதியிருப்பது, இப்படி திரும்புகிற திசையெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் சிம்புதேவனின் கற்பனை, வசனங்கள் என்று வரும்போது சமுதாய பிரச்சனைகளை 'வாருவதற்கும்' தவறவில்லை. லேசாக ஒரு சந்து கிடைத்தால் போதும், கூராக ஒரு ஆணியை செருகி அதிர வைக்கிறார் மனுஷன்!

வைரத்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு து£க்கில் தொங்க விடப்படுகிற சிங்காரத்தை காப்பாற்றுகிறது மூவர் குழு. இவரை போலவே தோற்றம் உள்ள சிங்கத்தை கடவுளாக நினைக்கிறது ஊர். கொஞ்ச நாள் சிங்கமாக நடிங்க என்பதுதான் சிங்காரத்துக்கான அசைன்மென்ட். சிங்கம் எப்படியிருப்பான்? அவன் நிழலை விட வேகமா இருப்பான் என்று சொன்னால் போதாது என்று விஷ§வலாக காட்டுகிறார்களா, தியேட்டரில் சிரிப்படங்க வெகுநேரம் ஆகிறது.

அப்படியே செவ்விந்திய கூட்டத்துக்குள் சிக்கிக்கொள்கிற சிங்கம், அங்கு 'மனித ப்ரை' ஆக்கப்படுகிற அந்த கடைசி நிமிடத்தில் பண்ணுகிற அலப்பறைக்கு தனியாக ரூம் போட்டே சிரிக்கலாம். (வைதேகி காத்திருந்தாள் படத்தையும் விட்டு வைக்கலேங்க) 'வாராயோ தோழி வாரோயோ' பாடலை செவ்விந்திய மொழியில் பாடுவதற்கெல்லாம் தனி தில்லு வேணும் சாரே! இறுதியாக புதையல் தேடி புறப்படுகிறது இந்த கௌபாய் கூட்டம். வில்லன், காமெடியன், ஹீரோ, என்று கிளம்பும் இந்த முப்படை இறுதியாக புதையலோடு வர, அதை இரும்புக்கோட்டை கிழக்கு கட்டை லபக்கி கொள்ள க்ளைமாக்ஸ் ஃபைட்!

சிங்காரமாகவும், சிங்கமாகவும் லாரன்ஸ். அப்பாவித்தனம் அசால்ட்டாக வருகிறது இவருக்கு. அதே நேரத்தில் காணாமல் போன சிங்கம் கேரக்டரை இன்னும் கொஞ்ச நேரம் காண்பித்திருந்தால் சற்று நிமிர்ந்து உட்கார்ந்திருக்கலாமோ? லட்சுமிராய், சந்தியா, பத்மப்ரியா என்று தலா ஒருவருடன் இவர் ஆடும் டூயட்டுகளும், காதல் சீன்களும் பெட் ரெஸ்ட் மாதிரி சீட் ரெஸ்ட்டுக்கு தள்ளுவது வேதனை. அந்த புண்ணியத்தை கட்டிக் கொள்வது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தான். ஒரு பாடலாவது தேற வேண்டுமே. ம்ஹ¨ம்!

செவ்விந்திய இனத் தலைவனாக வருகிற எம்எஸ்.பாஸ்கரும், அவரது பாஷையும் விறுவிறுப்பு ப்ளஸ் சிரிசிரிப்பு. இவர் பேசுவதை மட்டுமல்ல, உடல்மொழியையும் டிரான்ஸ்லேட் செய்யும் சாம்ஸ்... தியேட்டரையே துவம்சம் ஆக்குகிறார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அந்த கால நடிகர் வி.எஸ்.ராகவன் அலட்டிக்கொள்ளாமலே அதிர வைக்கிறார். 'ரெண்டு நாளைக்கு ஒரு தடவ போட்டுக்கலாமாம்' என்று அவர் அலுத்துக் கொள்கையில் படீர் சத்தம் தியேட்டரில்! நாசரின் அல்லக்கையாக வரும் சாய் குமார் பேசி பேசியே எரிச்சலுற வைத்தாலும், வினாடிக்கு வினாடி மாறும் அவரது முகபாவமும், குரலும் கவனத்தை ஈர்க்கிறது.

பதினெட்டாம் நு£ற்றாண்டை கண் முன்னே கொண்டு வந்திருப்பதில் தனிப்பெரும் அப்ளாஸ்களை அள்ளிக்கொள்கிறார்கள் ஒளிப்பதிவாளர் அழகப்பன், காஸ்ட்யூமர் சாய், மற்றும் ஆர்ட் டைரக்டர் முத்துசாமி ஆகியோர்.

அரிவாளை தீட்டிக்கொண்டு அடிவயிற்றிலிருந்து அலறும் வில்லன்களையும், ஹீரோக்களையுமே பார்த்து தாயத்து கட்டாத குறையாக பீதியடைந்திருக்கும் தமிழனுக்கு, சிம்புதேவனின் இந்த கோட்டை, சரியான பொழுதுபோக்கு வேட்டை!