நான்

Paddalam.blogspot.com உங்களை வரவேற்கின்றது...
JavaScript Free Codee 2

ஞாயிறு, 30 மே, 2010

சூர்யா - கார்த்தியுடன் கைகோர்க்கும் சன் குழுமம்


சூர்யா மற்றும் கார்த்தி இருவரையும் சேர்த்து ஒரு புதிய படத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.
ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படங்கள்தான் இனி கோலிவுட்டில் ஜெயிக்கும் என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் கூறிவரும் நிலையில், அதற்கு செயல்வடிவம் தரும் வகையில், தனது அடுத்த படத்தை சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தியை இணைத்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளது சன்.

வழக்கம்போல வாங்கி விற்கும் படமாக இல்லாமல், எந்திரனுக்கு அடுத்து சொந்தமாக சன் தயாரிக்கும் படமாக இருக்கும் என்கிறார்கள்.

இயக்குநர், ஹீரோயின் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விரைவில் அறிவிக்கவிருக்கின்றனர்.

சூர்யா இப்போது ரத்த சரித்திரம், ஏழாம் அறிவு படங்களிலும், கார்த்தி நான் மகான் அல்ல உள்ளிட்ட 3 படங்களிலும் நடிக்கிறார்கள். இந்தப் படங்கள் படங்கள் முடியும் வரை காத்திருக்காமல் இடையிலேயே படப்பிடிப்புத் துவங்கும் எனத் தெரிகிறது.

செவ்வாய், 25 மே, 2010

சித்திக்கின் அடுத்த குண்டு விஜய்க்கு பில்டப் சாங் இல்லை!


ஹீரோவோட அறிமுக காட்சிக்கே தனியா ரூம் போட்டு யோசிக்கிறாங்க கோடம்பாக்கத்தில. பனைமரம் உசரத்துக்கு அவரை காட்டணும் என்பதற்காகவே பள்ளம் பறிச்சு கேமிராவை வைக்கிற பழக்கம்மெல்லாம் எந்த சிந்தனை சிற்பி(?) ஆரம்பிச்சு வைச்சாரோ? இதையாவது சகிச்சுக்கலாம், முதல்ல கால் நகத்தை காட்டுறது, அப்புறம் விரலை காட்றது, அப்புறம் காலுக்கு ஒரு குளோஸ் அப்! இப்படி முழு ரீல் முடிஞ்ச பிறகும் கூட ஹீரோ முகத்தை காட்டாம பில்டப் கொடுப்பதெல்லாம் கோடம்பாக்கம் தினந்தோறும் படிக்கிற கோனார் திரை உரை!.

அண்மையில் வந்த சுறா படத்தில் விஜய்யின் அறிமுக காட்சியை பற்றி பேசாத ரசிகனே இல்லை. அந்த பேச்சு எந்த ரகம் என்பது நமக்கு தேவையில்லாத விஷயம். அந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத ரசிகனுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுக்க தயாராக இருந்தாராம் விஜய். அதை ஆரம்பத்திலேயே முறியடித்து ரசிகர்களுக்கு ஆனந்த செய்தியை கொடுத்திருக்கிறார் சித்திக்.

தனது அறிமுக காட்சிக்கு, தன்னை வியந்து ஒரு பாடல் இருந்தா நல்லாயிருக்கும் என்றாராம் விஜய். அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க வந்து நான் சொன்னதை மட்டும் செய்யுங்க என்றாராம் சித்திக். இப்படி ஒரு பதிலை கேட்ட பிறகும் பில்டப் சாங் கேட்டு பிரச்சனை செய்வாரா விஜய்? போகட்டும் என்று அமைதி காத்துவிட்டாராம். போற போக்கை பார்த்தா படம் நல்லாயிருக்கும் போலிருக்கே!

ஸ்ரீதேவியின் மகளை தமிழில் நாயகியாக அறிமுகப்படுத்தும் இயக்குநர் சசிகுமார்

சுப்ரமணியபுரம், பசங்க மற்றும் நாடோடிகள் ஆகிய மூன்று படங்களில் இயக்குநராக, தயாரிப்பாளராக மற்றும் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டியவர் சசிகுமார்.
இப்போது நகரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் தயாரிப்பாளர் நடிகர் விக்ரம்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த சசிகுமாருக்கு நடிகை ஸ்ரீதேவியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

உடனே மும்பைக்கு விமானத்தில் பறந்த சசிகுமார், ஸ்ரீதேவியைச் சந்தித்துள்ளார். அவருக்கு தனது வீட்டில் விருந்தளித்த ஸ்ரீதேவி, தன் மகள் ஜானவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த வேண்டும் என சசிகுமாரைக் கேட்டுக் கொண்டாராம். கூடவே, "உங்கள் நடிப்பு எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு. உங்களுடன் ஜோடியாக என் மகளை அறிமுகப்படுத்தினால் இன்னும் சந்தோஷம்" என்று கூற, மறுப்பேதும் சொல்லாமல் உடனடியாக ஒப்புக் கொண்டாராம் சசிகுமார்.

ஏற்கனவே தெலுங்கு படத்தில் ஜானவியை நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வந்தன. நாகார்ஜுனா-அமலா தம்பதியின் மகனான அகிலுக்கு ஜோடியாக நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்த முடிவை மாற்றிக்கொண்டு தமிழ் படத்தில் அறிமுகப்படுத்துகிறார்.

ஜானவிக்கு 14 வயதுதான் ஆகிறது. இப்போதே முயற்சித்தால்தான், நல்ல கதை, கதாபாத்திரங்கள் தேர்வு என ஒரு வருடம் கழிந்து விடும். அதற்குள் ஜானவி கதாநாயகி தகுதியை அடைந்து விடுவார் என்று கருதுகிறார்.

ஸ்ரீதேவி 16 வயதில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். மகளையும் அதே பதினாறு வயதில் அறிமுகப்படுத்த இப்போதே வலுவாக அடித்தளம் போடுகிறார் ஸ்ரீதேவி.

ஞாயிறு, 23 மே, 2010

விஜய்யும் மகேஷம் ஒன்னா?

ஐந்து கரங்களாலும் கணக்கெழுதினாலும் அடங்காது போலிருக்கு நஷ்டக்கணக்கு! இப்படி ஐங்கரன் நிறுவனம் நமுத்துப் போயிருந்த நேரத்தில்தான் 'அங்காடி தெரு' வந்து ஆறுதல் அளித்தது.
துண்டு துக்கடா ஊர்களில் கூட இப்போதும் கலெக்ஷனை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த படத்தால் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள். அதில் ஒருவர் சொன்ன கமென்ட்தான் திரையுலகம் கேட்டு மகிழ வேண்டிய செய்தி.

அங்குசம் சிறுசுதான். ஆனால் அதுதான் மலைய புரட்டி மல்லாக்க போட்டிருக்கு என்றாராம் அந்த தயாரிப்பாளர். கொஞ்சம் விளக்கமா பார்ப்போமோ? வில்லு படத்தை எடுத்த வகையில் கோடிக்கணக்கான நஷ்டம் ஐங்கரனுக்கு. அடுத்தடுத்த படங்களில் அந்த தொகையை இழப்பீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நேரத்தில் அங்காடி தெருவின் வசூல், வில்லு கடனை அடைத்துக் கொண்டிருக்கிறதாம்.

அவ்ளோ பெரிய விஜய்யோட கடனையே நேத்து வந்த சின்னப் பையன் மகேஷ் அடைக்கிறான். என்ன ஒரு விந்தை பாருங்க என்கிறாராம் அவர். இவரு சொல்றதை பார்த்தா விஜய்யும் மகேஷ§ம் ஒண்ணு. இதை விளங்கிகிட்டா வின்னுன்னு ஒரு புதுமொழி எழுதலாம் போலிருக்கே!.

வெள்ளி, 21 மே, 2010

விஜய் படங்களுக்குத் தடையா?

தொடர் பிளாப் படங்களால் பெரும் நஷ்டம்- விஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர்கள் முக்கிய முடிவு
விஜய் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவுவதோடு பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தி வருவதால் நடிகர் விஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் நடித்து ஆதி, போக்கிரி, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.
இதில் போக்கிரி மெகா ஹிட். ஆனால் மற்ற படங்கள் வணிக ரீதியாக பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியவையாக விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகின்றன.
தொடர்ந்து விஜய் படங்கள் தோல்வியைத் ஒவ்வொரு முறை விஜய் படம் தோல்வியுறும்போதும், நஷ்டத்தை சந்திப்பவர்கள் தியேட்டர் உரிமையாளர்கள்தான். விநியோகஸ்தர்களை விட இவர்களுக்குத்தான் பெரும் பாதிப்பு ஏற்படுகிறதாம்.
இந்த நஷ்டக் கணக்கை விஜய் தரப்பிடம் கூறும்போதெல்லாம் அடுத்த படத்தில் சமாளித்து விடலாம் என்று ஆறுதல் கூறப்படுமாம். ஆனால் வருகிற அத்தனை படங்களும் தோல்விப் படமாகவே இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
வில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர்ந்து மூன்று படங்களும் பெரும் தோல்விப் படங்களாக தியேட்டர் உரிமையாளர்களால் கூறப்படுகின்றன. இதனால் பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்துள்ளனராம்.
இதையடுத்து சில முடிவுகளுக்கு அவர்கள் வரவுள்ளனராம். இதுகுறித்து நாளை சென்னையில் கூடி ஆலோசித்து முடிவை அறிவிக்கவுள்ளனராம்.
அவர்கள் தற்போது எடுத்துள்ள முடிவுளாக கூறப்படுபவை என்னவென்றால், நஷ்டங்களை சரிக்கட்டும் வகையில் ஒரு படத்தை நடித்துத் தர வேண்டும். இல்லாவிட்டால் தியேட்டர் உரிமையாளர்களுக்காக ஒரு படத்தில் விஜய் நடிக்க வேண்டும்.
தியேட்டர் உரிமையாளர்களுக்கு நிவாரணம் தரும் வகையில் விஜய் நடந்து கொள்ளாவிட்டால் அவருக்கு ரெட் கார்ட் போடுவது, அவரது படங்களைத் திரையிடுவதில்லை என்ற முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் வந்துள்ளனராம்.
தொடர்ந்து ஒரே மாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். அவரது ஒரே மாதிரியான நடிப்பு அவரது ரசிகர்களையே சலிப்படைய வைத்துள்ளது. இந்த நிலையில் பெரும் பணத்தை செலவழித்து தியேட்டருக்கு வந்து பார்க்க மக்கள் எப்படி முன் வருவார்கள். எனவே விஜய் தனது பாணியை மாற்றிக் கொண்டால் மட்டுமே இனி அவரது படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும், மற்றவர்களின் நஷ்டமும் முடிவுக்கு வரும் என தியேட்டர் உரி்மையாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
தியேட்டர் அதிபர்களின் இந்த நடவடிக்கையால் திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது

வியாழன், 20 மே, 2010

விஜய் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு திரைப்படமும் ஒரு நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறது. தமிழில் உருவாகும் திரைப்படங்களில் பெரும்பான்மையானவை பணம் பண்ணுவது என்ற நோக்கத்திற்காக எடுக்கப்படுபவை. அங்காடித்தெரு போன்றவை விதிவிலக்கு.

இவற்றிற்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தாலும், நடைமுறை வாழ்வில் இருக்கும் நிஜத்தை காட்சிப்படுத்தும் நோக்கத்தையும், நல்ல சினிமா என்ற விமர்சனத்தை பெற்றுவிட வேண்டும் ஆவலையும் இவ்வகைப் படங்கள் தன்னகத்தே கொண்டுள்ளன.

விஜய்யின் திரைப்படங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரே நோக்கம் அதிக ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைப்பது, அதன் மூலம் அதிக லாபம் சம்பாதிப்பது என்பது மட்டுமே. திரைப்படங்கள் வர்த்தக அந்தஸ்தை பெற்றுவிட்ட இந்த‌ச் சூழலில் இதை ஒரு குற்றச்சாற்றாக யாரும் முன்வைக்க முடியாது என்பதே உண்மை.

webdunia photoWD

இந்த நோக்கத்திற்கு ஏற்ப விஜய் படங்கள் தயா‌ரிப்பாளர்கள், திரையரங்கு உ‌ரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், கேன்டீன் நடத்துகிறவர்கள் என சகல தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து கொடுக்கும் அட்சய பாத்திரமாகவே இருந்து வந்தன. ர‌ஜினிக்குப் பிறகு அனைத்து தரப்பினரும் லாபம் பெற்றுத் தரும் நடிகர் என்று விஜய்யையே கை காட்டுகிறார்கள். ர‌ஜினி மூன்று நான்கு வருடங்களுக்கு ஒரு படம் என்று சுருங்கியப் பிறகு விஜய்யின் முக்கியத்துவம் அபி‌ரிதமான அளவு வளர்ந்தது.

ஆனால் இன்று நிலைமை வேகமாக மாறி வருகிறது. அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என சமீபத்தில் விஜய் நடித்தப் படங்கள் அனைத்துமே வசூலில் திருப்தியை தரவில்லை. நடுவில் வந்த போக்கி‌ரி மட்டும் விதிவிலக்கு. இந்த நிலைமைக்கு விஜய்யே முழு பொறுப்பு என்று கூறிவிட முடியாது.

என்றாலும் இந்த நிலையை மாற்றும் முழுப் பொறுப்பும், கடமையும், அதற்கான சாத்தியமும் விஜய்க்கு மட்டுமே உள்ளது. இனி வரும் படங்களில் அவர் சில மாற்றங்களை கண்டிப்பாக யோசித்தே ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். பார்வையாளர்கள் விரும்பும் சில மாற்றங்கள் பற்றி பார்ப்போம்.

பூமியை பிளந்து கொண்டோ, வானத்தை கிழித்துக் கொண்டோ வரும் அறிமுகக் காட்சி, அதனைத் தொடர்ந்து வரும் அறிமுகப் பாடல் என்ற வழக்கத்தை விட்டொழிப்பது.

நான் அடிச்சா தாங்க மாட்டே, கை வச்சா யோசிக்க முடியாது என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் பழக்கத்தை விட்டொழிப்பது.

ஆம்பள நான் அப்படிதான் இருப்பேன், பொம்பள நீ இப்படிதான் இருக்கணும் என்று பொம்பளைக்கு புத்தி சொல்லும் பழக்கத்தை மறந்துவிடுவது.

நூறு லேப் டாப்பை விற்று நூறு கோடி பணம் சம்பாதிப்பது போன்ற காமெடிகளை முடிந்தவரை தவிர்ப்பது.

என் பின்னாடி ஒரு சிங்கக் கூட்டமே இருக்கு என்று விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு படத்தில் இரை போடுவதை சுத்தமாக விட்டொழிப்பது.

ஜனங்களுக்கு ஏதாவது செய்யணும் போல இருக்கு என்று படத்திலும், நிஜத்திலும் அரசியல் பிரவேசத்துக்கு அடிபோடாமலிருப்பது.

காமெடி என்றதும் தோளை குறுக்கி தலையை ஆட்டி வாய்ஸை மாற்றும் மிமிக்கி‌ரியை அடியோடு நிறுத்தி‌க் கொள்வது.

ஆறு பாட்டு, நாலு சண்டை என்ற பார்முலாவை முடிந்தவரை தவிர்ப்பது. இந்த பார்முலாவுக்குள் எந்தக் கதையைப் போட்டாலும் அது ஒரே கதையாகிவிடும் ஆபத்து அதிகமுண்டு.

அதிகம் அடிக்காத, அதிகம் ஆவேசப்படாத பூவே உனக்காக, காதலுக்கு ம‌ரியாதை, லவ்டுடே போன்ற படங்கள்தான் தனக்கு திருப்புமுனையாக அமைந்தது என்பதை உணர்ந்து அந்தவகைப் படங்களை அவ்வப்போதாவது செய்ய முயற்சி மேற்கொள்வது.

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழி எல்லோர் வாழ்விலும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்ற உண்மையை பு‌ரிந்து கொள்வது.

பார்வையாளர்களின் இந்த பத்து எதிர்பார்ப்புக்கு விஜய் செவிகொடுக்க முன்வந்தால் தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தி என்ற பட்டம் அவருக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. செய்வாரா இளைய தளபதி?

புதன், 19 மே, 2010

மருமகனுக்கு ர‌ஜினி வாழ்த்து

சமீபத்தில் தனுஷுக்கு வாழ்த்து தெ‌ரிவித்தார் ர‌ஜினி. எதற்காக இந்த வாழ்த்து?
பல படுதோல்விகளை கொடுத்தாலும் பாரதிராஜா என்றால் பரபரக்கதான் செய்கிறது தமிழ் சினிமா. அவரது இயக்கத்தில் நடிக்க எல்லா நடிகர்களுக்கும் விருப்பம் உள்ளது.

இந்நிலையில் அடுத்து இயக்கப் போகும் தென்கிழக்குச் சீமையிலே, குற்றப்பரம்பரை இரண்டும் தனது கனவுப் படங்கள் என அவர் அறிவித்ததால் அதில் நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு அமையும் என கோடம்பாக்கமே உற்று கவனித்து வந்தது.

இந்நிலையில் தனுஷை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து கதை சொன்னார் பாரதிராஜா. கதையிலும், பாரதிராஜாவின் அழைப்பிலும் உருகிப் போன தனுஷ் உடனே ஓகே சொல்லியிருக்கிறார்.

இந்தத் தகவலை அவர் ர‌ஜினியிடம் பகிர்ந்து கொண்டபோது, நல்ல முடிவு கண்டிப்பாக நன்றாக வரும் என வாழ்த்தியிருக்கிறார்.

4 மணி நேரம் நடிக்க ரூ. 40 லட்சம் வாங்கிய ஜெனிலியா

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜெனிலியா தற்போது உத்தமபுத்திரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்தி தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சம்பளம் கோடியை தாண்டியுள்ளதாம். சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் 4 மணி நேரம் நடிக்க ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெனிலியா நடிக்கும் ஆரஞ்ச் என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அங்கு வாட்ச் கம்பெனியொன்றின் நிர்வாகிகள் ஜெனிலியாவை அணுகி தங்கள் நிறுவன விளம்பர படத்தில் நடிக்க அழைத்தனர்.

4 மாதங்களுக்கு படங்கள் கைவசம் இருப்பதால் நடிக்க முடியாது என்று மறுத்தார். இரண்டு மணிநேரம் மட்டும் நடித்தால் போதும் என்று வாட்ச் கம்பெனிக்காரர்கள் வற்புறுத்தினர். டைரக்டரிடம் அனுமதி பெற்று இரண்டு மணி நேரம் நடித்து கொடுத்தார்.

மேலும் 2 மணி நேரம் கூடுதலாக நடிக்கும்படி வாட்ச் நிறுவனம் கேட்டது, அதை ஏற்றுக்கொண்டு நடித்து கொடுத்தார். இந்த 4 மணி நேரத்துக்கு ஜெனிலியா வாங்கிய சம்பளம் ரூ.40 லட்சமாம்.

திங்கள், 17 மே, 2010

குப்பையான படங்களில் நடித்து ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை : அஜீத்


அஜீத் நடிக்கும் படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால்தான் அவர் ரேஸ் பக்கம் திரும்பி விட்டார் என்ற கேள்விக்கு, அவர் பதில் அளிக்கையில்,

'உண்மையைச் சொல்லணும்னா... நான் நடிச்ச அனைத்துப் படங்களிலும் என்னுடைய 100 சதவிகித உழைப்பைக் கொட்டியிருக்கிறேன். அதில் பல படங்கள் தோல்வியுற்றதில் எனக்கு வருத்தம்தான். இதுக்கு மேலேயும் நான் குப்பையான படங்களில் நடித்து ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. இன்றைய சூழ்நிலையில் திரையரங்குக்கு வந்து சினிமா பார்க்கிறதுங்கிறது ரொம்ப செலவு பிடிக்கற விஷயமாகிவிட்டது. நிறைய காசு செலவு செய்து படம் பார்க்க வரும் ரசிகர்கள் குப்பையான படங்களை விரும்ப மாட்டாங்க.

அதனால் மட்டமான படங்களில் நடிப்பதை விட வீட்டில் உட்காரது மேல்னு நினைக்க ஆரம்பிச்சுட்டேன். நான் மனசு வச்சா வருடத்துக்கு 200 நாள்கள் கால்ஷீட் கொடுத்து கோடிக்கோடியா சம்பாதிக்கலாம். ஆனால் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. அஜீத்தை பொறுத்தவரைக்கும் தன்னுடைய மனசுக்குப் பிடித்ததை மட்டும்தான் செய்வான். அதுதான் சந்தோஷம் கூட' என்றவர் தொடர்ந்து,

'சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்தாலும் நல்ல படமா நடிப்பேன்' என்று சொல்லியிருக்கிறார் அஜீத்.

'தல'யைப் போல 'தளபதி'யும் திருந்திட்டா எவ்வளவு நல்லாயிருக்கும்?

திருமண நிகழ்ச்சிக்கு புதுமண தம்பதி போல் வந்த பிரபுதேவா-நயன்தாரா


திருமண நிகழ்ச்சியில் புதுமண தம்பதிபோல் நயன்தாராவும் பிரபுதேவாவும் பங்கேற்றனர். பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மகள் சுமையா திருமண வரவேற்பு கொச்சியில் நடந்தது.

மலையாள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபுதேவாவும், நயன்தாராவும் கலந்து கொண்டனர். காரில் இருந்து இறங்கி கைகோர்த்தபடி வந்தார்கள். மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார்கள். பின்னர் முன் இருக்கையில் அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

இருவரையும் பார்க்க திருமணத்துக்கு வந்தவர்கள் முண்டியடித்தனர். குணசித்திரநடிகர் ஒருவர் கூறும் போது பிரபுதேவா, நயன்தாரா நடவடிக்கைகள் ஒரு புதுமண தம்பதியைபோல் இருந்தது என்றார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் திருமண கூட்டத்தினர். கிசுகிசுத்தனர். கேரளாவில் பொது நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து பங்கேற்பது இதுவே முதல்முறை.

ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த படவிழாவில் சேர்ந்து கலந்து கொண்டனர். சமீபத்தில் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு சென்னையில் திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் இணைந்து நடனம் ஆடினர். நயன்தாராவை அடிப்பேன் என்று பிரபுதேவா மனைவி ரம்லத் மிரட்டி இருந்தார். அதனால் சில மாதங்கள் ரகசியமாக சந்தித்த அவர்கள் சென்னை விழாவில் ஒன்றாக ஆடியது பரபரப்பை எற்படுத்தியது.

பின்னர் வெளிநாடுகளில் ஒன்றாக சுற்றுலா சென்றனர். அமெரிக்கா, பிரான்சு, இந்தோனேசியா போன்ற நாடுகளில் சுற்றி பார்த்தனர். இப்போது உள்நாட்டிலும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்து உள்ளனர். இரு வீட்டாரையும் சமரசப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

நயன்தாரா படிப்படியாக சினிமாவில் நடிப்பதை குறைக்கிறார். நிறைய படவாய்ப்புகள் வருகின்றன. எதையும் ஒப்புக்கொள்ளவில்லை

தமிழில் நடித்த ஆதவன் படம் சில மாதங்களுக்கு முன் வெளியானது. தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் எலக்ட்ரா என்ற படத்தில் நடிக்கிறார். மனிஷா கொய்ராலாவும் பிரகாஷ்ராஜும் அவருக்கு தாய் தந்தையாக நடிக்கின்றனர். வேறு படங்கள் இல்லை. இவற்றை முடித்து விட்டு முழு நேர குடும்பவாழ்க்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளாராம். தனி குடித்தனம் நடத்த புதிதாக வீடு பார்க்கிறார்கள்.

சனி, 15 மே, 2010

சித்திக் வீட்டு கல்யாணம் : செல்ல விரும்பாத விஜய்


பாங்காக் போயிருக்கிறார் விஜய். இது இன்ப சுற்றுலாவாக இருக்குமோ என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. இது வேற வேற வேற....!

சுறா படத்தின் ரிசல்ட்டை அடுத்து முன்னணி பத்திரிகைகளில் வருகிற விமர்சனங்களும், அட்வைஸ் கடிதங்களும் விஜய்யை வெறுப்பேற்றி வருகின்றன. என்றாலும் இந்த ட்ரிப் அதற்கான வடிகால் அல்லவாம். அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் காவல்காரன் படத்தின் இயக்குனர் சித்திக் மகளுக்கு கேரளாவில் திருமணம். உள்ளூரில் இருந்தால் அதற்கு போக வேண்டுமே? அதனால்தான் இந்த வெளிநாட்டு ட்ரிப் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். நடிக்கிற படத்தை, இயக்குகிற டைரக்டர் அழைத்தால் அவர் வீட்டு விசேஷத்துக்கு கூட போக முடியாத அளவுக்கு என்ன பிரச்சனை?

வேறொன்றுமில்லை. விஜய்யின் வழக்கமான பில்டப்புகள், பஞ்ச் டயலாக்குகளுக்கு ஒரு பஞ்ச் வைத்துவிட்டாராம் சித்திக். படப்பிடிப்பில் விஜய்யின் அட்வைஸ்களையும் கேட்பதில்லையாம். இதனால் வெறுப்புக்குள்ளான ஹீரோ, இந்த கல்யாண நேரம் பார்த்து பாங்காக் போய்விட்டாராம். இவர்தான் போகவில்லையே தவிர, தனது கள்ளக்காதலி நயன்தாரா சகிதம் இந்த விசேஷத்துக்கு போய்விட்டு வந்திருக்கிறார் பிரபுதேவா! அதுவும் போன உடனே கிளம்பாமல் அதிக நேரம் மணப்பந்தலில் இருந்தாராம்.

ஒரு வெற்றி வந்து கோபதாபங்களை மாற்றும். அதுவரைக்கும் விஜய்.... அமைதி அமைதி!

விஜய் ரசிகர்களின் கடிதம்...


மொட்டைக கடிதாசி ரேஞ்சுக்கு பல்வேறு பத்திரிகைகளிலும் உங்கள் ரசிகன் எழுதும் கடிதம் எனும்படியாக ஏகப்பட்ட கடிதங்கள்… அத்தனையும் நடிகர் விஜய்க்கு.
இதுபோன்ற கடிதங்களை உண்மையில் ரசிகன் எழுதுகிறானோ இல்லை சம்பந்தப்பட்ட பத்திரிகைகளே எழுதிக் கெள்கின்றனவோ… தெரியவில்லை, ஆனால் இந்தக் கடிததங்களின் எண்ணிக்கை ‘வேட்டைக்காரன் படம் ரிலீஸ் ஆனபோது எழுதப்பட்ட கடிதங்களைவிட சுறாவின் போது வெளிவந்தவை மிகமிக அதிகம். இந்தக் கடிதங்களில் எல்லாம் ஒரே மாதிரி வேண்டுகோள்தான் வைக்கப்பட்டிருக்கிக்றனவாம். விஜய் நடித்து வரும் மசலா படங்கள் பாதையில் இருந்து மாற்றிப் பயணம் செல்ல சொல்கிறது அந்த வேண்டுகோள்.

பாதை மாறுவாரா விஜய்…பொறுத்திருந்துப் பார்ப்போம்.

வியாழன், 13 மே, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்

லெதர் டிரஸ் கௌபாய் ஹீரோக்களை மறுபடியும் உலவ விட்டு, நெஞ்சுக்குள் ஒரு ஃபெதர் டச் கொடுத்திருக்கிறார் சிம்புதேவன். தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்கிக் கொண்டு தனிக்குதிரை சவாரி செய்யும் இவருக்கு கௌபாய் ஸ்டைலில் ஒரு 'டுமீல்....!'

இரும்புக்கோட்டையை சேர்ந்த கிழக்கு கட்டை, தனக்கு கீழே சில ஊர்களை அடிமையாக வைத்திருக்கிறான். அவனின் அடக்குமுறையை எதிர்த்து போராடுகிறான் முரட்டுசிங்கம். யாருக்கு வெற்றி என்பதுதான் ஒருவரி கதை. இதற்காக சிம்புதேவன் உருவாக்கிய உலகம் இருக்கிறதே, வாரே வாவ்...! ஷோலேபுரம், ஜெய்சங்கர்புரம், அங்கேயிருக்கிற அசோகன் போன்ற அந்தகால வில்லன் சிலைகள், 'இங்கு குரல்வளை நெரிக்கப்படும்' என்ற வாசகத்தோடு இயங்கும் து£க்குமேடை, பாஸ்மாக் கடை போர்டில், குடி குடியை ரேப் பண்ணும் என்று எழுதியிருப்பது, இப்படி திரும்புகிற திசையெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் சிம்புதேவனின் கற்பனை, வசனங்கள் என்று வரும்போது சமுதாய பிரச்சனைகளை 'வாருவதற்கும்' தவறவில்லை. லேசாக ஒரு சந்து கிடைத்தால் போதும், கூராக ஒரு ஆணியை செருகி அதிர வைக்கிறார் மனுஷன்!

வைரத்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு து£க்கில் தொங்க விடப்படுகிற சிங்காரத்தை காப்பாற்றுகிறது மூவர் குழு. இவரை போலவே தோற்றம் உள்ள சிங்கத்தை கடவுளாக நினைக்கிறது ஊர். கொஞ்ச நாள் சிங்கமாக நடிங்க என்பதுதான் சிங்காரத்துக்கான அசைன்மென்ட். சிங்கம் எப்படியிருப்பான்? அவன் நிழலை விட வேகமா இருப்பான் என்று சொன்னால் போதாது என்று விஷ§வலாக காட்டுகிறார்களா, தியேட்டரில் சிரிப்படங்க வெகுநேரம் ஆகிறது.

அப்படியே செவ்விந்திய கூட்டத்துக்குள் சிக்கிக்கொள்கிற சிங்கம், அங்கு 'மனித ப்ரை' ஆக்கப்படுகிற அந்த கடைசி நிமிடத்தில் பண்ணுகிற அலப்பறைக்கு தனியாக ரூம் போட்டே சிரிக்கலாம். (வைதேகி காத்திருந்தாள் படத்தையும் விட்டு வைக்கலேங்க) 'வாராயோ தோழி வாரோயோ' பாடலை செவ்விந்திய மொழியில் பாடுவதற்கெல்லாம் தனி தில்லு வேணும் சாரே! இறுதியாக புதையல் தேடி புறப்படுகிறது இந்த கௌபாய் கூட்டம். வில்லன், காமெடியன், ஹீரோ, என்று கிளம்பும் இந்த முப்படை இறுதியாக புதையலோடு வர, அதை இரும்புக்கோட்டை கிழக்கு கட்டை லபக்கி கொள்ள க்ளைமாக்ஸ் ஃபைட்!

சிங்காரமாகவும், சிங்கமாகவும் லாரன்ஸ். அப்பாவித்தனம் அசால்ட்டாக வருகிறது இவருக்கு. அதே நேரத்தில் காணாமல் போன சிங்கம் கேரக்டரை இன்னும் கொஞ்ச நேரம் காண்பித்திருந்தால் சற்று நிமிர்ந்து உட்கார்ந்திருக்கலாமோ? லட்சுமிராய், சந்தியா, பத்மப்ரியா என்று தலா ஒருவருடன் இவர் ஆடும் டூயட்டுகளும், காதல் சீன்களும் பெட் ரெஸ்ட் மாதிரி சீட் ரெஸ்ட்டுக்கு தள்ளுவது வேதனை. அந்த புண்ணியத்தை கட்டிக் கொள்வது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தான். ஒரு பாடலாவது தேற வேண்டுமே. ம்ஹ¨ம்!

செவ்விந்திய இனத் தலைவனாக வருகிற எம்எஸ்.பாஸ்கரும், அவரது பாஷையும் விறுவிறுப்பு ப்ளஸ் சிரிசிரிப்பு. இவர் பேசுவதை மட்டுமல்ல, உடல்மொழியையும் டிரான்ஸ்லேட் செய்யும் சாம்ஸ்... தியேட்டரையே துவம்சம் ஆக்குகிறார். ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அந்த கால நடிகர் வி.எஸ்.ராகவன் அலட்டிக்கொள்ளாமலே அதிர வைக்கிறார். 'ரெண்டு நாளைக்கு ஒரு தடவ போட்டுக்கலாமாம்' என்று அவர் அலுத்துக் கொள்கையில் படீர் சத்தம் தியேட்டரில்! நாசரின் அல்லக்கையாக வரும் சாய் குமார் பேசி பேசியே எரிச்சலுற வைத்தாலும், வினாடிக்கு வினாடி மாறும் அவரது முகபாவமும், குரலும் கவனத்தை ஈர்க்கிறது.

பதினெட்டாம் நு£ற்றாண்டை கண் முன்னே கொண்டு வந்திருப்பதில் தனிப்பெரும் அப்ளாஸ்களை அள்ளிக்கொள்கிறார்கள் ஒளிப்பதிவாளர் அழகப்பன், காஸ்ட்யூமர் சாய், மற்றும் ஆர்ட் டைரக்டர் முத்துசாமி ஆகியோர்.

அரிவாளை தீட்டிக்கொண்டு அடிவயிற்றிலிருந்து அலறும் வில்லன்களையும், ஹீரோக்களையுமே பார்த்து தாயத்து கட்டாத குறையாக பீதியடைந்திருக்கும் தமிழனுக்கு, சிம்புதேவனின் இந்த கோட்டை, சரியான பொழுதுபோக்கு வேட்டை!


புதன், 12 மே, 2010

சிங்கம் படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு!

சன் பிக்சர்ஸ் வழங்கும் "சிங்கம்" ரிலீசுக்கு தயாராகி விட்டது. படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. சிங்கம் படத்தில் சூர்யா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் 'துரைசிங்கம்'. ஹரியின் முந்தைய படமான சாமி போல் இந்தப் படமும் பெரிதும் பேசப்படும் என பட வட்டாரங்கள் கூறகின்றன. மேலும் சூர்யாவின் போலீஸ் கதாபாத்திரம் மற்ற படத்தில் வரும் போலீஸ் கதாபாத்திரத்தை விட மிகவும் சுவரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் இயக்குநர் ஹரியிடம் சிங்கம் படத்தை பற்றி கேட்டோம்.

சிங்கம் அவ்வளவு சீக்கிரத்துல பாயாது. பாய்ஞ்சுதுன்னா, எதிராளிய காலி பண்ணிட்டு தான் வரும். அப்படியான கேரக்டர்தான் சூர்யாவுக்கு. சிங்கம் ஒரு அடி அடிச்சா, ஒன்றரைடன் வெயிட்டு இதுதான் படத்துல சூர்யா பேசுற பஞ்ச். விதவிதமான கோணத்துல சூர்யா தெரிவார். கிராமம், நகரம்,
மாநகரம்ங்கற மூμ ஏரியாவுல கதை பயணிக்கும். இதுதான், இப்படித்தான் இருக்கும்னு எந்த காட்சியையும் யூகிக்க முடியாத திரைக்கதை, படத்துக்கு பலமா இருக்கும் என்கிறார் ஹரி.

இதற்கிடையில் சிங்கம் படத்தின் பாடல் நாளை வெளியீடப்படுகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளளார். படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.



செவ்வாய், 11 மே, 2010

ஞாயிறு, 9 மே, 2010

பிரபல நிறுவனத்துடன் அஜித்குமார் ஒப்பந்தம்

உலகத் தரம் வாய்ந்த மோட்டார் கார் பந்தைய வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து நிர்வாகம் செய்யும் பிரபல நிறுவனம் EURASIA MOTOR SPORTS MANAGEMENT.அதன் இயக்குனர் PIERS-HONNIST. இருபைத்தந்து வருடங்களுக்கும் மேலாக இத்துறையில் தேர்ந்தவர் மட்டுமல்ல…முன்னாள் கார் பந்தைய வீரரும் ஆவார்.மோட்டார் கார் பந்தைய வீரர்களுக்கான பந்தைய நுணுக்கங்களை மட்டுமல்ல…அவர்களுடைய விளம்பர வணிகத்தையும் நிர்வாகம் செய்வதில் பிரசித்தி பெற்ற நிறுவனம் இது.

பிரபல கார் பந்தைய வீரர் நரேன் கார்த்திகேயனின் F1 பங்களிப்பை தொடர்ந்து அவரது இதர பந்தயங்களையும் இவர்கள் தான் நிர்வகிக்கிறார்கள்.சமீபத்தில் இந்த நிறுவனம் அஜித்குமாருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த நிறுவனமே இனி அஜித்குமாரின் தொழில் ரீதியான மோட்டார் கார் பந்தயங்களை நிர்வகிக்கும்.

F2 போட்டி என்பது F1 க்கான கடைசி நுழைவுவாயில் என்பது குறிப்பிடத்தக்கது.2010 F1&F2 போட்டி ஏப்ரல் 16-ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள சில்வர்ஸ்டோன் நகரில் தொடங்கவிருக்கிறது.இதற்கான முன்னேற்பாடு குறித்து விவாதிக்கவும்,பயிற்சி எடுக்கவும் கடந்த 28-ஆம் தேதி இங்கிலாந்துக்கு கிளம்பி போயிருக்கிறார்.

எண் 28 உடன் கூடிய FMSCI சின்னத்துடன் போட்டியிடும் அஜித்குமார் தனது கனவை மட்டுமின்றி… சக இந்தியர்களான நரேன் கார்த்திகேயன்,அர்மன் இப்ராஹிம்,கருண் சந்தோக்,பார்த்திவ்சுரேஷ்வரன் ஆகியோரையும் ஊக்குவித்து… உற்சாகப்படுத்திய F1 அமைப்புக்கு இச்செயல் மூலம் நன்றி தெரிவிக்கிறார்.

அஜித்குமாருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சிகரமானது.அவருடைய ஆர்வமும்,உற்சாகமும் அவருடைய முயற்சிக்கு 110 சதவிகிதம் கை கொடுக்கும். F3 போட்டியில் கலந்து கொண்டு சிலவருட இடைவெளிக்குப் பிறகு இப்போது போட்டியில் பங்கெடுக்கிறார்.இருந்தாலும் இரண்டொரு சுற்றிலேயே அவருடைய வேகம் கூடும்…அவருடைய விடாமுயற்சியும் ஆர்வமும்…அவரை நிச்சயம் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று சொல்கிறார் PIERS-HONNIST.

சனி, 8 மே, 2010

அஜீத் - கவுதம் மேனன் புதிய படம் 'துப்பறியும் ஆனந்த்'!

அஜீத் - கவுதம் மேனன் கூட்டணி உருவாக்கும் படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அஜீத் நடித்த அசல் படம் சமீபத்தில் வெளியாகி, ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத் பேசிய விவகாரம் பெரும் பிரச்சினையானது.

இதனால் தனது 50வது படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார் அஜீத். இப்போது பிரச்சினைக்கு முதல்வரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதால், தனது 50 வது பட வேலைகளில் பிஸியாகியுள்ளார் அஜீத்.

இந்தப் படத்தை முதல்வர் கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். கவுதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று தெரிகிறது.

படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என தலைப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்தச் செய்தியை உங்களுக்கு முதலில் தெரிவிப்பது தட்ஸ்தமிழ் என்பதையும் நினைவில் கொள்ளவும்!

ஜீத் – அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்து விட்டது : விசி குகநாதன்

ரஜினி – அஜீத்துடனான பிரச்சினை தீர்ந்தது என்று பெப்ஸி தலைவர் விசி குகநாதன் தெரிவித்துள்ளார்.
திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டித்தன. ரெட் கார்டு போடுவோம் என்று மிரட்டின. பின்னர் திரைப்பட கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டார்.
முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று திரைப்பட சங்கத்தினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதாகவும் போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்படுவதாகவும் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் இன்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
“எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம். அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது. கலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்குவதை ஏற்க மாட்டோம்.
கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல்படுவோம்…”, என்றார்.
முன்செல்ல